Up next

அச்சாரி உருளைகிழங்கு வறுவல் | Achari Aloo Roast Recipe in Tamil

1 Views· 01/31/25
HomeCooking Tamil
HomeCooking Tamil
0 Subscribers
0

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
https://youtu.be/qu6YlRTlofw

அச்சாரி உருளைகிழங்கு வறுவல் | Achari Aloo Roast in Tamil

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு- 6
கடுகு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - ஒரு சிட்டிகை
கருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
ஆம்சுர் பவுடர் - ஒரு சிட்டிகை
ஊறுகாய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்

செய்முறை
1. முதலில், உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் போட்டு, 4 - 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டவும்.
2. ஒரு பேனில் கடுகு எண்ணெயை ஊற்றி, சீரகம், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
3. உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு ஒருபுறம் 2 நிமிடங்கள் வறுத்து பின், மறுபக்கம் திருப்பி மேலும் 2 நிமிடங்கள் வறுக்கவும்.
4. அடுத்து உருளைக்கிழங்கின் மேல், கொடுக்கப்பட்டுள்ள அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கருஞ்சீரகம், கரம் மசாலாத்தூள் மற்றும் ஆம்சூர் பவுடர் சேர்த்து பத்து நிமிடங்கள் வறுக்கவும்.
5. உருளைக்கிழங்கு பொன்னிறமான பிறகு இதில் ஊறுகாயை சேர்த்து, எல்லா துண்டுகளின் மீதும் படும் படி கிளறி வறுக்கவும்.
6. அருமையான அச்சாரி உருளைகிழங்கு வறுவல் தயார்.

#AchariAlooRoast #aloo #potato

Show more

 0 Comments sort   Sort By


Up next